தல வரலாறு
வடபழநி ஆண்டவர்கோயில் உள்ள இடத்தில் இன்றைக்குச் சற்றே ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன் சாலிகிராமம் என்னும்பகுதியல்,அண்ணாசாமிநாயகர் என்பவருடைய வீடு இருந்தது. அவருடைய தாயார் தகப்பனார் பெயர்கள் தெரியவில்லை. இளமையிலேயே அவர் அருள் நாட்டமும் இனிய குணங்களும், எவரிடமும் பணிவுடன் இன்சொற்பேசும் இயல்பும், உடையவராக இருந்தார்.பெற்றோர்கள் அவரை வியாக்கிரபுரீரஸ்வரர் கோயிலின் அருகில் குடியிருந்த சாம்பசிவம் பிள்ளை என்னும் தமிழ் அறிஞர் ஒருவரிடம் அனுப்பிக்கல்வி கற்க ஏற்பாடு செய்தனர்.ஆனால் அவருக்கு படிப்பில் நாட்டம் செல்ல வில்லை நாளடைவில் பள்ளிக்குச் செல்வதையும் நிறுத்திக்கொண்டார் . முன்புசெய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பம் ஆள அன்பினை எடுத்துக்காட்ட.... என்றபடி, அவருக்கு இறையண்பு மட்டும் பெருகி வளர்ந்து வந்தது. உற்ற வயதில் திருமணம் செய்து கொண்டு இரண்டு புதல்வர்களைப் பெற்ற இவர், வயிற்றுவலி...வடபழநி ஆண்டவர்கோயில் உள்ள இடத்தில் இன்றைக்குச் சற்றே ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன் சாலிகிராமம் என்னும்பகுதியல்,அண்ணாசாமிநாயகர் என்பவருடைய வீடு இருந்தது. அவருடைய தாயார் தகப்பனார் பெயர்கள் தெரியவில்லை. இளமையிலேயே அவர் அருள் நாட்டமும் இனிய குணங்களும், எவரிடமும் பணிவுடன் இன்சொற்பேசும் இயல்பும், உடையவராக இருந்தார்.பெற்றோர்கள் அவரை வியாக்கிரபுரீரஸ்வரர் கோயிலின் அருகில் குடியிருந்த சாம்பசிவம் பிள்ளை என்னும் தமிழ் அறிஞர் ஒருவரிடம் அனுப்பிக்கல்வி கற்க ஏற்பாடு செய்தனர்.ஆனால் அவருக்கு படிப்பில் நாட்டம் செல்ல வில்லை நாளடைவில் பள்ளிக்குச் செல்வதையும் நிறுத்திக்கொண்டார் . முன்புசெய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பம் ஆள அன்பினை எடுத்துக்காட்ட.... என்றபடி, அவருக்கு இறையண்பு மட்டும் பெருகி வளர்ந்து வந்தது. உற்ற வயதில் திருமணம் செய்து கொண்டு இரண்டு புதல்வர்களைப் பெற்ற இவர், வயிற்றுவலி நோயால் மிகவும் துன்பமுற்று இருந்தார்.ஆயினும்,நாயக்கர் மனம் தளராமல் ஏகாங்கிஆகவே திருப்போரூர் சென்று முருகனை வழிப்பட்டு திரும்பினார்.அடுத்த கிருத்திகைக்குத் திருப்போரூர் செல்லப்புறப்பட்ட போது, பெருமழை பெய்து இடையிலுள்ள ஆற்றில் வெள்ளம் மிகுந்து, நடந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டு விட்டது.படகிற்சென்றவர்களும்வெள்ளம் கண்டு திரும்பிவிட்டனர். ஆனால் அண்ணாசாமி நாயக்கர் மட்டும் மனம் சிறிதும் தளராமல், திட சித்தத்துடன் வெள்ளத்தை நீந்திக் கடந்து திருப்போரூர் சென்று வழிப்பட்டே திரும்பினார்.ஊர் மக்கள் அவர்தம் பக்தியின் பெருக்கையும்,உள்ளத்திண்மையையும் வியந்து புகழ்ந்தனர்.திருப்போரூர் சென்று தொழுதும் வயிற்று வலி தீர்வதாக இல்லை.என்றாலும் அவர்மனம் தளராமல்யான் திருப்போரூர் சென்று முருகனை வழிபட்டே வருவேன் என்று கூறி, மூன்றாம் முறையும் அண்ணாசாமியார் திருப்போரூர் சென்று முருகனைப் பணிந்து வழிப்பட்டார்.வழிபாட்டை முடித்துக்கொண்டு, கண்ணுப்பேட்டையில் சிதம்பர சுவாமிகள் சந்நிதியின் எதிரில் இரவு படுத்துகொண்டார். அப்போது கனவில் ஒரு பெரியவர் தோன்றி உன் வீட்டிலேயே முருகன் குடியிருக்கிற பொழுது அங்கேயேநீமுருகனைவழிப்பட்டுமகிழலாமை என்றுகூறகேட்டுஉறக்கத்தினின்றுதிடுமெனவிழித்துஎழுந்துமுருகன்அருளைநினைத்துஉருகிதொழுதுவீட்டுக்குதிரும்பிவந்துசேர்ந்தார். செய்தியைவீட்டில்உள்ளவர்களுக்குஅறிவித்துஅன்றுமுதல்தம்வீட்டிலேயேகாலைமாலைஇருவேளைகளிலும்முருகனைநினைத்துவழிபாடுசெய்துகொண்டுவந்தார். அப்போதுஅவருக்குப்பழநியில்இருந்துவந்தசாதுமுன்னர்தெரிவித்தப்படி,திருத்தணிகைக்குச்செல்லவேண்டும்என்கிறவிருப்பமும்,அங்குச்சென்றுஏதேனும்காணிக்கைசெலுத்தினால்தான்தம்நோய்தீரப்பெறும்என்றகருத்தும்,பெரிதாகநிகழ்ந்துவந்தன.முருகனைவழிபடுகிறபோதுஅவரைநாவாரப்பாடிமகிழவேண்டும்என்கிறவிருப்பமும்அண்ணாசாமிநாயகருக்குஉண்டாயிற்று.இளமையிற்கல்வியறிவுபெறாமற்போனதைஎண்ணியெண்ணிவருந்தினார். திருப்போரூரில்அடியார்கள்திருப்புகழ்பாடிமுருகனைவழிபட்டகாட்சியையும்,ஆங்காங்கேஅன்பர்கள்கந்தர்அனுபூதி,கந்தர்அலங்காரம்,கந்தர்கலிவெண்பா,வேல்வகுப்பு,மயில்விருத்தம்,திருப்போரூர்ச்சந்நிதிமுறைமுதலியவற்றைப்பாராயணம்செய்துகொண்டுஅமர்ந்திருந்தஅழகையும், நினைத்துநினைத்துதான்அவ்வாறுபாடமுடியவில்லையேஎன்றுஏங்கினார்.அவருக்கு ஏதோஓர்உள்ளுர்ணர்ச்சிதோன்றியது.முருகனைப்பாடாதநாக்கினைப்பெற்றநாம்நமதுநாக்கையேஅவன்திருமுன்ஏன்பலியிட்டுக்காணிக்கைசெலுத்தக்கூடாதுஎன்றஎண்ணம்தோன்றியது.உடனே அவர் சிறிதும் தாமதிக்காமலும், தயங்காமலும் முருகா முருகா எனக் கூவிக் அழைத்து தமது சாவிக்கொத்தில் இருந்து சிறு கத்தியினை எடுத்து நாக்கை அறுத்து ஒரு இலையில் எந்தி பலிபீடத்தின் அடியில்வைத்து அடியற்ற மரம் போல தணிகை அண்ணலின் திருமுன் வீழ்ந்து வணங்கினார். பழநிசாது தெரிவித்தது போன்று புதுமையான காணிக்கை செலுத்திய மன நிறைவு அவருக்குஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த மக்கள் அண்ணாசாமியாரின் செய்கையை கண்டு மிகவும் வியப்புற்றனர்.அச்சமும் அன்பும் பக்தியும் மதிப்பும் கலந்த ஒருவகை உண்ர்ச்சிஅவர்களைஆட்கொண்டது.நாக்குதுண்டிக்கப்பெற்றதால்குருதிபெருகமயங்கிக்கிடந்தநாயகரின்முகத்தில்,அன்பர்கள்சிலர்தண்ணீர்தெளித்துபணிவிடைகள்செய்தனர். நாக்கைஅறுத்துஇறைவனுக்குக்காணிக்கைசெலுத்தும்வழக்கத்திற்குப்பாவாடம்என்றுமக்கள்பெயர்வழங்குவர்.நாயகர்முருகனுக்குத்தமதுநாக்கைஅறுத்துக்காணிக்கைசெலுத்தியஇடமேதிருத்தணிகையில்இப்போதுபாவாடமண்டபம்என்றுவழங்கப்படுகிறது. நீண்டநேரம்கழித்துநாயகர்நினைவுபெற்றுக்கண்விழித்தார். வாய்பேசவராதநிலையிலும்நாயகர்முருகாமுருகாஎனகுமுறிகுமுறிமுணுமுணுத்தார்.கோயிலைவலம்வந்தார். அருகில்இருந்தபடக்கடையில் முருகன் படம் ஒன்றை பார்த்து வணங்கினார்.யாரோ ஒரு அன்பர் உடனே அப்படத்தை வாங்கி அவருக்கு அன்பளிப்பாக வழங்கினார். நம்அண்ணாசாமியார் தமக்கு அம் முருகன் படம் கிடைத்ததைப் பெரும்பேறு என்ற கருதி அதைத் தம் தலைமேல் வைத்துக் கொண்டு மகிழ்ந்து கூத்தாடி இன்புற்றார். இங்ஙனம் திருத்தணிகை வழிபாட்டை முடித்துக் கொண்டு மறுநாள் அவர் சென்னை வந்து சேர்ந்தார்.திருத்தணிகையில் இருந்துகொண்டு வந்த படத்தைத் தமது வீட்டில் வைத்து வழிபாடு செய்து கொண்டு வந்த நாயகருக்கு அதற்குப்பின் வயிற்று வலி ஏற்படவேயில்லை.அவர்தம் நோய் அறவே அகன்றொழிந்தது.நிலநாட்களில்அவர்தம் நாக்கும் நன்கினிது வளர்ந்து விட்டது.அவர்தம் அன்பின் பெருக்கையும்பக்தி உணர்வையும் மனத்திண்மையைம் அறிந்த அன்பர் பலர் அவரிடம் வந்துபேசுவதனுடன்தமதுகுறைகளையும்கூறி,அவை தீரும்வழிவகைகளையும்கேட்கதொடங்கலாயினர் நாயகர்அவர்களுக்கெல்லாம் ஒன்றும் விடை கூறஇயலாதநிலையில்முருகனைவழிபடும்படிஅறிவுறுத்தி அனுப்பிவிடுவார்.இந்நிலையில்நாயகர்அவர்களுக்குப்பழநிசெல்லவேண்டும்என்னும்ஆர்வம்மிகவும்பெருகிவந்தது.ஒருநாள்திடிரென்றுநாயகர்கால்நடையாகவேபலதலங்களையும்தரிசித்துகொண்டுபழநிசென்றுஅடைந்தார்.ஆராஅன்புடன்வலம்வந்துவழிபட்டுப்பெருமகிழ்வுற்றார். பழநியில்சிலநாட்களபக்திபெருக்குடன்தங்கிமகிழ்ந்துஇன்புற்றார். அப்போது அவருக்கு மேலும் மேலும்பழநி பரமண்பால் பக்தி ஓங்கி வளர்ந்து வந்தது. ஒரு நாள் அவர் ஞான தண்டாயுதபாணியை மலை மேற்சென்று தரிசித்துக் கொண்டு படிகளில் கிழிறங்கி வந்தார்.வழியில் இருந்த படக்கடை ஒன்றில் பழநி ஆண்டவரின் பெரிய அழகிய படம் ஒன்ற அவர் கண்களைக் கவர்ந்தது. அதன்பால்ஈடுபட்டு நாயகர் அதனையே பார்த்துக் கொண்டு அங்கேயே நின்று விட்டார். அப்படத்தை விலைக்கு வாங்கிக்கொள்வதற்கு அவர் கையில் பொருள் ஏதுமில்லை, ஆயினும் அவர் அதனைப் பெறவேண்டும் என்ற பெரிதும் விரும்பினார். அன்றிரவு அந்தப் படத்தை நாயகர் அவர்களிடம் தரும்படி கடைக்காரர் கனவிலும் அதைப் பெற்றுக் கொள்ளும்படி நாயகர் கனவிலும்அதைப் பெற்றக் கொள்ளும்படி நாயகர் கனவிலும் ஆண்டவர் அருள் புரிந்தார். மறு நாள் நாயகரைக் கண்டதும் கடைக்காரர் படத்திற்கு பூமாலை தரித்து மிகவும் அன்புடன் நாயகர்அவர்களிடம் தாமே வலிந்து வந்து கொடுத்து வணங்கிமகிழ்ந்தார்.நாயகர் அவர்கள் அந்தப் படத்தைப் பெருஞ்செல்வமாக மதித்துப் போற்றி எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார். தமது குறிமேடையில் அதனை வைத்து அதனைப் பழநி ஆண்டவர் திருக்கோயிலாக மாற்றி அமைத்தார். சிறிய கீற்றுக் கொட்டகையொன்று போட்டு தம் குடும்பத்தை வேறிடத்திற்கு இடம் பெயரச்செய்தார். தாம் குடும்பத்தினின்று விலகித் துறவு நெறிமேற்கொண்டுகாவிஉடைபுனைந்துஆண்டவர்சன்னதியிலேயேஇருக்கத்தலைபடலாயினார்.குறிகேட்கவரும்அன்பர்கள்மனமுவந்துகொடுக்கும்காணிக்கையைகொண்டுஆண்டவருக்குவழிபாடுமுதலியவற்றைசிறப்புறநடத்திவந்தார். அதுமுதல்நாயகர்க்குஅண்ணாசாமிதம்பிரான்என்னும்பெயர்வழங்குவதாயிற்று.1863-ம்ஆண்டுசஷ்டியின்போதுஒருவெள்ளிக்கிழமையன்றுமுதன்முதல் இரத்தினசாமிசெட்டியாரஅண்ணாசாமிதம்பிரான்அவர்களைகண்டார்.இரத்தினசாமிசெட்டியாரின்அன்பையும்ஆர்வத்தையும் அறிந்தஅண்ணாசாமிதம்பிரான்நமக்குபின்இவ்வழிப்பாட்டைதொடர்ந்துசெய்யக்கூடியவர் எனத்தேர்ந்து இரத்தினசாமிச் செட்டியாரை அன்புடன் அருகில் அழைத்து நீர் இங்கேயே இருந்துஆண்டவருக்குத் தொண்டு செய்தல் இயலுமா என்று வினவினார். இரத்தினசாமியார் எதிர்பாராத நிலையில் வினா எழவே மிகவும் தயங்கி அடியேன் குடும்பத்தவன் ஆயிற்றே என்னால் எங்ஙணம் இயலும் ஏதேனும்இயன்ற தொண்டுகளை மட்டும் தான் செய்து வருவேன் என்று பணிவுடன் தெரிவித்தார். அது கேட்ட தம்பிரான் இக்கீற்றுக் கொட்டகையை மாற்றி இங்குப் பழநி ஆண்டவருக்கு ஒரு சிறிய கோயில் கட்ட வேண்டுமென்ற என்று உள்ளம் விரும்புகின்றது.தாங்கள் இதற்கு ஏதேனும் உதவி செய்தல் இயலுமா என்றார்உடனே செட்டியார் அப்படியே செய்யலாம் தங்கள் விருப்பம் போலவே அன்பர்களுக்கும் இக்கருத்து உள்ளது. தாங்களே வாய் திறந்து பணிந்த பின்னர் அதனை நிறைவேற்றுவதில் என்ன தடை இன்றைக்கே கோவில் திருப்பணிக்கு உரிய ஏற்பாடுகளை செய்யலாம். தாங்கள் இசைவு தெரிவித்தால் பழனி ஆண்டவர் சிலை ஒன்றையும் அழகுற அமைப்பித்து கோவில் நிறுவி கும்பாபிஷேகம் விரைவில் செய்து விடலாம்என்று மிகவும் பேரார்வத்துடன் தெரிவித்தார். அண்ணாசாமி தம்பிரான்ஆண்டவன் பணிக்கு எம்முடைய இசைவு எதற்கு தங்கள் உள்ளத்தில் தோன்றுகிறபடியே திருப்பணிக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லி செட்டியாருக்குத் திருநீறு கொடுத்து அனுப்பிவிட்டார்.மறுநாளே, செட்டியார் வண்ணையம்பத்தக்குச் சென்ற தமக்குத் தெரிந்த ஒரு ஸ்தபதியாரிடம் பழநிஆண்டவர்பழநிஆண்டவர்சிலையொன்றுசெய்யும்படிஏற்பாடுசெய்தார். குறிமேடைக்குஅருகில்இப்போதுவடபழநிஆண்டவர்திருக்கோயிலின்கருவறைபகுதிஉள்ளஇடத்தில்செங்கல்சுண்ணாம்புகட்டிடம்ஒன்றுஅமைக்கப்பட்டது. அன்பர்கள்பலர்செய்தபொருள்உதவியினால்திருப்பணிவிரைவில்நிறைவேறியது.இதுசுமார்கிபி.1865-ம்ஆண்டாகஇருக்கலாம் என்றுதெரிகிறது.இந்நிலையில்ஆவணிமாதம்அமாவாசைத்திதிமகநட்சத்திரத்தன்றுஅண்ணாசாமித்தம்பிரான்ஆண்டவர்திருவடியைஅடைந்துவிட்டார்.மறுநாள்இரத்தினசாமிசெட்டியார்வீட்டுக்குசெல்லவும் விருப்பமின்றி அன்று மாலையில் கடைக்குச் சென்றார். மூடியிருந்த கடையைத் திறந்தபோது காவியுடை தரித்த யாரோ ஒரு பெரியவர் அங்கிருந்து வெளிப்பட்டுச் செல்வது போலத் தோன்றக் கண்டார். கடையை அப்படியே விட்டு, விட்டு அவர்தம் அடிச்சுவட்டைப் பின்பற்றி உடன் சென்றார். பெரியவரை அணுகவும் அவர்க்குஇயலவில்லை பேசவும் அவரால் முடியவில்லை. பேசாமல் பின் தொடர்ந்தார். காவியுடை அணிந்தவர் குறிமேடை வரை வந்து அங்கிருந்த கோயிலுக்குள் நுழைந்தார். பின் வந்த செட்டியார் உள்ளே புகுந்த போது பெரியவரைக் காணவில்லை.அதனால் திகைப்பும் வியப்பும் அடைந்தார் செட்டியார். அங்கிருந்தர்வகளும் நிகழ்ந்ததை அறிந்து வியப்பு மேலிட்டனர். இத்தகையை சில நிகழ்ச்சிகளால் செட்டியார் குடும்பப் பற்றுத் தவிர்த்து துறவுநெறியுணர்வு பெருகி ஆண்டவர் சந்நிதியிலேயே இருந்து கொண்டு வழிபாடு செய்யயத்தலைப்பட்டடார். ஒரு நாள் அவர்தம் கனவில் ஸ்ரீ அண்ணாசாமித்தம்பிரான் தோன்றி அவரையும் தம்மைப் போலவே பாவாடம் தரித்துக் கொள்ளுமாறு பணித்தார், அவ்வாறே ஓர் ஆடிக்கிருத்திகையன்று முறையாக நோன்பிருந்து வழிபாடுகள் செய்து நாக்கை அறுத்து இறைவன் திருமுன் வைத்து வழிபாடுகள் செய்து வழிபட்டார்.அன்றே அவர் காவியுடையும் புனைந்து கொண்டு துறவியாயினார். மக்கள் அவரைத் தம்பிரான் என்று அன்புடன்அழைக்கல்ஆயினர்.அடுத்த கிருத்திகை முதல் இரத்தினசாமித் தம்பிரானும் ஆவேசமுற்றுக் குறிசொல்லும் ஆற்றல் பெற்றார்.பின் சில நாட்களில் அண்ணாசாமித் தம்பிரான் விரும்பிய படியே தொடங்கப் பெற்ற கோயில் திருப்பணி சிறப்புற நிறைவேறியது. பழநியாண்டவர் சிலையும் பிரதிஷ்டை செய்யப் பெற்றுக் கும்பாபிஷேகமும் நன்கு நிறைவேறியது. வழக்கம் போல் குறி கேட்க வரும் அன்பர்கள் கொடுக்கும் காணிக்கைப் பொருளைக் கொண்டே இரத்தினசாமித் தம்பிரான் திருக்கோயிற் பூசை முதலிய செலவுகளை நன்முறையில் நடத்திக் கொண்டு வந்தார். கும்பாபிஷேகத்திற்குப் பிறகு கோடம்பாக்கம் குறிமேடையை, வடபழநி ஆண்டவர் கோயில் என்று வழங்கும்படிஇரத்தினசாமி தம்பிரான் அனைவரிடமும் கூறி வந்தார். நாளடைவில் வடபழநிக் கோயிலின் புகழ் சென்னை நகர் முழுவதும் விரைந்து பரவுவதாயிற்றுஇரத்தின சாமித் தம்பிரான், சுமார் இருபது ஆண்டுகள் கோயிலைச் சிறப்புறப் போற்றி நடத்தி வந்தார்.அவருக்குப் பின்னர் சென்னை சைதாப்பேட்டையைச் சேந்தவரும், செங்குந்தர் குலத்தில் தோன்றியவரும் ஆன பாக்கியலிங்கத் தம்பிரான் என்பவர் இரத்தினச்சாமித் தம்பிரானின் அன்பிற்குரிய சீடராக அமைந்தார்.அவரும் தம்குருவின் திருவுள்ளக் குறிப்பிற்கேற்பமுறைப்படி நோன்பிருந்துதுறவு பூண்டுகாவியுடைபுனைந்து வழிபாடுகள் நிகழ்த்திதம் நாக்கை அரிந்து இறைவன் திருமுன் படைத்துப் பாவாடம் தரித்துக் கொண்டார். தம் குடும்பததில் தம்குரிய சொத்தின் பங்கைக் கேட்டுப் பெற்று பழநியாண்டவர் கோயிற் பணிகளுக்கே பயன்படுத்தினார்.தம் குருவின் திருவுள்ளம் மகிழும்படி கோயிற் பூசைகளையும் முறையாக நடத்திவந்தார். இவருக்கும் இறைவன் அருளால் குறி சொல்லும் ஆற்றல் உண்டாயிற்றுகுருவும் சீடருமாக மனமொத்துப் பழநியாண்டவர்க்கு ஒரு சில ஆண்டுகள் பணிபுரிந்து வந்தனர். 1886 ஆம் ஆண்டு மார்கழி மாதம் சஷ்டி நாளில் சதய நட்சத்திரத்தன்று ஸ்ரீ இரத்தினசாமித் தம்பிரான் இறைவன் திருவடி நிழலையடைந்தார்.தம் குருநாதர் குகனின் திருவடி அடைந்தார். பின்னர்பாக்கியலிங்கத் தம்பிரான் அவர்கள் கோயிற் பணிகளை மிகவும் கண்ணுங் கருத்துமாக இருந்து அரும் பாடுபட்டு கவனித்து வந்தார்.இப்போதுள்ள வடபழநித் திருக்கோயிலின் கருப்பக் கிரகமும் முதல் உட்பிராகாரத் திருச்சுற்றும் கருங்கல் திருப்பணியாகக் செய்வதிததவர் ஸ்ரீ பாக்யலிங்கத் தம்பிரான்அவர்களேயாவர் வடபழநி கோயிலுக்கு இவர் பாவாடம் தரித்துக் கொண்ட நாள் முதல் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் பணிபுரிந்திருக்கின்றார் இவருடைய காலத்தில்தான் இவர்தம் சிறந்த அரும் பெரும் முயற்சிகளின் பயனாகவே ஸ்ரீ வடபழநி ஆண்டவர் கோயில் பெரும் புகழ் பெறுவதாயிற்று.சொல்லியது சொல்லியபடியேதவறாது பலித்து வந்தது அவர் தம் குறி சொல்லும் ஆற்றலால் அன்பர்கள் பெருந்திரளாக கூடி வந்தனர். கோயிலின் வளர்ச்சியும் புகழும் நன்கு பெருகின இந்நிலையில் ஆயிரத்துக் தொள்ளாயிரத்து முப்பத்தோராம் ஆண்டு புரட்டாசித்திங்கள் தசமி திதி கூடிய பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீ பாக்யிலிங்கத் தம்பிரான் பழநி யாண்டவர் திருவடியைப் பாங்குற அடைந்தார். அவருடைய பொன்னுடலும் அவருக்கு முன்னிருந்த தம்பிரான்களின் சமாதிக்கு அருகில் உரிய முறையில் பூசை முதலிய சிறப்புகளுடன் சமாதி வைக்கப்பட்டது. இம்மூவருடைய சமாதிப் பூசையும் வழிபாடுதொடர்ந்து நடந்து வருகின்றன.இம்மூவரின் சமாதிகளும் வடபழநியாண்டவர் கோயிலுக்கு ஒரு பர்லாங்கு தொலைவில் இருக்கின்றன. ஸ்ரீபாக்கியலிங்கத் தம்பிரானுக்குப் பின்னர்அவர்கள் முறையைப் பின்பற்றிக் குறி சொல்லத்தக்கவர் ஒருவரும் அமையவில்லை, இப்போதுள்ள கோயிலின் தென்கிழக்கப் பக்கத்தில் பழைய குறிமேடை இருந்த இடம்இன்றும் இருக்கின்றது அங்கு அண்ணாசாமியார் பழநியிலிருந்து கொண்டுவந்த திருவுருவப்படம் இருக்கிறது.மாதம் தோறும் சித்தர்கள் சமாதியில் மூவருக்கும் பௌர்ணமியன்று சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் அன்பர்களால் செய்யப்பட்டு வருகிறது. அருள்மிகுவடபழநி ஆண்டவர் ஆலயத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளாலும் அறங்காவலர்களாலும் தக்காராலும் சிறப்பான முறையில் நிர்வாகம் செய்யப்பட்டுவருகிறது. வாழ்வளிக்கும் நாதனாய், வரமளிக்கும் தெய்வமாய், வாரி வழங்கும் வள்ளலாய்,ஸ்ரீ வடபழநி ஆண்டவரை வணங்கி எல்லா நலன்களும் பெற்று இன்புற்றுவாழ வேண்டுகிறோம்.